எஸ்பிளனேடு என்பதற்கு கோட்டைக்கு வெளியிலுள்ள இடம் அல்லது கோட்டை மைதானம் என பொருள் கொள்ளலாம். எதிரியின் வருகையை தொலைவில் இருந்தே அறிய கோட்டையை சுற்றி காலி இடங்கள் பேணப்பட்டன. ஆங்கிலேயர் ஆண்ட கொல்கொத்தா , மும்பை உள்ளிட்ட பெருநகரங்கள் பெரும்பான்மையானவற்றில் ஒரு எஸ்பிளனேடு இருக்கும்.மெட்ராஸில் ஆங்கிலேயர்கள் வடிவமைத்த முதல் தெரு எஸ்பிளனேடு என சொல்லப்படுகிறது.
Esplanade, Madras around c1870சென்னைக்கு வந்திறங்கிய ஆங்கிலேயர்கள் 1644-ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டி முடித்தார்கள். கோட்டையை ஒட்டி கறுப்பர் நகரம் உருவானது. . இடையில் ஆங்கிலேயர்களைத் தாக்கிய பிரெஞ்சுப் படையினர் கோட்டையைக் கைப்பற்றினர். மூன்று ஆண்டுகள் பிரெஞ்சுக்காரர்கள் கையில் கோட்டை இருந்தது. அதன்பிறகு இருதரப்புக்கும் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆங்கிலேயரிடம் கோட்டை வந்தது.
அதன் பின் ஆங்கிலேயர்கள் கோட்டையின் பாதுகாப்பைப் பலப்படுத்தினர். கோட்டையை ஒட்டி நெருக்கமாக அமைந்திருந்த 8,700 வீடுகளைக் கொண்டிருந்த கறுப்பர் நகரம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கோட்டையைச் சுற்றி குறிப்பிட்ட தூரத்துக்கு எந்தக் கட்டுமானங்களையும் உருவாக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அந்த எல்லையைக் குறிக்கும் வகையில் 13 தூண்கள் நிறுவப்பட்டன. அந்த தூண்களில் ஒன்று மட்டும் ‘1 ஜனவரி 1773’ என்ற நாட்குறிப்பைச் சுமந்துகொண்டு இன்றும் டேர் மாளிகையின் கீழ் நிற்கிறது.
கிழக்கில் இன்றைய ராஜாஜி சாலையில் தொடங்கி, மேற்கே வால்டாக்ஸ் சாலையில் முடியும் எஸ்பிளனேடு கடந்த நூற்றாண்டில் நகரின் முதன்மை வணிக மையமாக விளங்கியது. எஸ்பிளனேடு கடந்த தற்போது என்.எஸ்.சி போஸ் சாலை என அழைக்கப்படுகிறது.
Esplanade Road Madras – Old Photo 1900
உதவிய பதிவு
இடம், பொருள், ஆவல்:சு. அருண் பிரசாத் , விகடன் 07-01-2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக