ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

பூவாடைக்காரி

 கவித்துவமான இந்த வார்த்தையின் மீது  தரங்கபாடி குறித்த ஒரு ஆய்வின் போது இடற நேரிட்டது. ஆனால் , உட்சென்று வாசிக்க அந்த வார்த்தை ஊனையும், உயிரையும் உருக வைத்தது. "கீற்று" இணைய தளத்தில் 2013 ஆம் ஆண்டு ஒரு கட்டுரையில் இந்த பூவாடைக்காரி இடம்பெற்று இருந்தது. ஒரு தூக்கம் தொலைத்த இரவுக்குப் பின், கட்டுரையாளர் பேரா . ஆ . சிவசுப்ரமணியன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். "பூவாடைக்காரி" இடம் பெற்ற "தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி" நூல் வடிவம் பெற்றுள்ளதாகவும் எனக்கு ஒரு பிரதி தருவதாகவும் வாக்களித்தார். 

இனி பூவாடைக்காரி குறித்த கட்டுரையின் பகுதியை அப்படியே தருகிறேன். 

தஞ்சை நாயக்கர் ஆட்சியில் நாயக்க மன்னரது உறவினர்களும் நெருக்கமானவர்களும் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களும், இவர்களது படை வீரர்களும் குடிகாரர்களாகவும் பெண்பித்தர்களாகவும் இருந்தனர். தரங்கம்பாடி பகுதியில் இவர்கள் மேற்கொண்ட இழி செயல்களை, ராமசாமி என்ற மெய்கண்டான் என்பவர் 1995ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையில் இடம் பெற்ற செய்தியை மரியலாசர் (2010:72-73) தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இப்பகுதியில் பெண் குழந்தைகள் முதற் பூப்படைந்தவுடன், தம் வீரர்களை அனுப்பி வலுக்கட்டாய மாகத் தூக்கி வரும்படி பாளையக்காரர்கள் கட்டளை இடுவர். அவ்வாறு கவர்ந்து வரப்பட்ட சிறுமிகள் அவராலும் அவரைச் சார்ந்தவர்களாலும் பாலியல் வன்முறைக்கு ஆளாவர். பின்னர் அச்சிறுமிகளைக் கொன்று விடுவர் அல்லது டச்சுநாட்டு வணிகர்களுக்கு அடிமை யாக விற்று விடுவர்.

இத்தகைய கொடுமையில் இருந்து தம் பெண் குழந்தைகளை விடுவித்துக்கொள்ள இயலாத நிலையில் கௌரவக் கொலையை மக்கள் மேற்கொண்டனர். தம் வீட்டில் சிறுமி ருத்தி பூப்பெய்தியவுடன், தம் வீட்டிற்குள் குழி ஒன்றைத் தோண்டுவர். அக்குழிக்குள் எண்ணெய் விளக்கொன்றை வைத்து அதை ஏற்றி வைக்கும்படி அச்சிறுமியிடம் கூறுவர். அச்சிறுமி குழிக்குள் இறங்கி அவ்விளக்கை ஏற்றும்போது குழிக்குள் மண்ணைத் தள்ளி உயிருடன் புதைத்து விடுவர்.

பிறகு சேலை ன்றில் பூக்களைக் கொட்டி பொட்டலமாகக் கட்டுவர். அச்சிறுமியைப் புதைத்த இடத்திற்கு மேல் அப்பொட்டலத்தைக் கயிற்றில் கட்டித் தொங்கவிடுவர்.

இதனையடுத்து எண்ணெய் விளக்குகளை ஏற்றிக் கற்பூரம் கொளுத்துவர். தாம்பாளம் ஒன்றில் பழங்கள், மலர்கள், தேங்காய், சந்தனம், குங்குமம், சாம்பிராணி ஆகியனவற்றை வைப்பர். அச்சிறுமியை உயிருடன் புதைத்த இடத்தில் அத்தாம்பாளத்தை வைத்து தெய்வமாக அச்சிறுமியை வழிபடுவர்.

இதன்பின் நாள்தோறும் மாலை நேரத்தில் அந்த இடத்தில் விளக்கேற்றுவர். அச்சிறுமி இறந்த நாளை ஆரவாரத்துடன் பக்தி உணர்வு மேலோங்க வழிபடுவர். அச்சிறுமியைக் குறித்துப் பாளையக்காரரின் படைவீரர்கள் விசாரித்தால், அம்மைநோயால் அச்சிறுமி இறந்து போனதாகக் கூறிவிடுவர்.

இவ்வாறு பெற்றோரால் கௌரவக் கொலை செய்யப்பட்ட சிறுமிகளைப் பூவாடைக்காரி என்று பெயரிட்டு வணங்கி வந்தனர். 1620இல் டேனியர் களின் கட்டுப்பாட்டில் இப்பகுதி வந்தபின் பூவாடைக் காரி உருவாவது நின்றுபோனது.

இனி இந்த பூவாடைக்காரி வழிபாடு பற்றி  விக்கிபீடியா தரும் தகவல்களை காணலாம்.

பூ என்பதற்கு பூப்பு என்பது பொருள். பூப்பு என்பதற்கு பூப்படைதல், மாதவிடாய் என்பது பொருள். ஒவ்வொரு வீட்டிலும் பருவம் எய்திய ஆண், பெண்கள் கன்னிகழிவதற்குமுன் இறந்துவிட்டால் அவர்களை வழிபடுவது பூவாடைக்காரி வழிபாடு ஆகும்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் அனைத்து ஊர்களிலும் பூவாடைக்காரி வழிபாடு உள்ளது.இதற்கு உருவச்சிலை இல்லை. இறந்த ஆண் முன்னோருக்கு வெள்ளைத் துண்டும், பெண் முன்னோருக்கு சிவப்புத் துண்டு (அ) புடவையும் வைத்து வழிபடுவர், அவ்வாடைகளே முன்னோர்களாகக் கருதப்படுகிறது. மேலும் கரகம் சோடித்து அக்கரகத்தையே முன்னோர்களாகக் கருதுகின்றனர்.ஊரில் அவரவர் வீட்டிலுள்ள பூசை அறையே  முன்னோர்களை வழிபடும் கோயிலாக அமைகிறது.

குளக்கரையில் (அ) கிணற்றங்கரையில் கரகம் சோடித்து அதை முன்னோராகக் கருதி அவர்களை அழைத்துவந்து பூசை அறையில் வைத்து வழிபடுவர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் நாளில் இவ்வழிபாடு நடைபெறும்.வன்னியர், பறையர், ரெட்டியார், சைவப் பிள்ளை மற்றும் செட்டியார் போன்ற குலத்தினர் இவ்வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.

Frontline இதழில் ஆகஸ்ட் 28, 2009 இதழில் திரு.Dorairaj  எழுதிய கட்டுரையின் பகுதியை அப்படியே தருகிறேன்.

S. Madasamy, a former coordinator of the Arivoli Iyakkam (literacy movement), who had conducted an extensive study on the history of little-known female deities, said honour killings still continued in the State and were usually committed by intolerant relatives of women who had taken control of their own lives or had chosen partners on their own. To escape police action and stall legal measures, the perpetrators of such crimes glorified the victims by installing a putam, a mound of earth or a small structure made of bricks, in the villages and deified them, he said. Another reason for deifying the victims was the guilty conscience of the perpetrators, he added.

Both Madasamy and the veteran folklorist A. Sivasubramanian, who conducted field studies on folk deities in several villages of Tamil Nadu, said the State has a long history of honour killings. Little-known female deities worshipped in rural areas were invariably victims of honour killings committed in the last 300-400 years.

According to Madasamy, over 300 such deities were identified in surveys conducted by him and his colleagues in the Arivoli Iyakkam and the Madurai unit of the Bharat Gnan Vigyan Samithi in the 1990s. The devotees and priests of these temples assert that the deified women had disappeared owing to supernatural powers and were not murdered.

These folk deities are not popular in urban and semi-urban areas and are worshipped only by the local people and their relatives who may live in other places. Their legends, once stripped of their mythical elements, reveal a history of attacks on the weaker sections and the dispossessed, Sivasubramanian said.

பூவாடைக்காரிகளாக  மாறிப்போன, வெளி வராத கதைகளாக மாண்டு போன சிறு பெண்களுக்காக , சாதிய ஆணவத்தால் இன்றும் பலியாகும், பறிகொடுக்கும் பெண்களுக்காக சில துளி கண்ணீர் விடுவதை விட ஒரு சாமானியனால் என்ன செய்து விட முடியும்? 







3 கருத்துகள்:

  1. பெண்கள் நமது மண்ணில் சந்தித்த கொடுமைகளையும் அதனால் சாமானியர்கள் பட்ட கஷ்டங்களையும் தெளிவாக எடுத்துரைத்தமைக்கு உங்களுக்கும், உதவிய ஏனைய வரலாற்று ஆசிரியர்களுக்கும் நன்றி. அறிவியல் நன்கு வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் ஆண் பெண் பேதமின்றி மனிதன் வாழும் சூழ்நிலை இல்லாதது வேதனையளிக்கிறது. காலத்திற்கு தகுந்தது போல பெண்களுக்கு எதிரான கொடுமைகள் புது வடிவம்‌ எடுப்பதை மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையோடு எதிர்த்து பெண்கள் பாதுகாப்பாக வாழ வழி வகைகள் செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. Sad posterity. Amazing to consider the grace of God that delivered us from this horrible culture and curse.

    பதிலளிநீக்கு