வெள்ளி, 19 டிசம்பர், 2025

நீலகிரி நினைவலைகள்-1

 St. Stephen's Church


மேலே படத்தில் இருப்பது ஊட்டியில் உள்ள St. Stephen's Church.

ஊட்டியில் ஆங்கிலேயர்களுக்கான பிரத்யேக ஆலயம் வேண்டும் என்று எண்ணிய அப்போதைய சென்னை மாகாண கவர்னர் லூசிங்டன் அவர்களால் 23-04-1829 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இது நான்காம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த தினம்.
                                    

05-11-1830 அன்று பேராயர் டர்னர் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த ஆலயம் , 03-04-1831, ஈஸ்டர் தினத்தன்று பயன்பாட்டிற்கு வந்தது.



இந்த கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் முக்கிய உத்திரங்கள் மற்றும் கதவுகள் ஸ்ரீரங்கபட்டிணத்தில் உள்ள திப்பு சுல்தான் அரண்மனையில் இருந்து எடுக்கப்பட்டவை. (நான்காம் ஆங்கிலேய-மைசூர் யுத்தத்தில் தோல்வியடையந்த திப்பு 1799 இல் இறந்து போனார் ). 



ஆங்கிலேய இராணுவத்தின் மெட்ராஸ் படைப்பிரிவை சார்ந்த Caption John James Underwood, இந்த ஆலயத்தின் கட்டிட கலைஞராக பணியாற்றி ₹ 24,000/- மதிப்பீட்டில் கட்டி முடித்தார்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக